எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
போடி.- தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் என்ற அமைப்பினை வேலம்மாள் கல்வி குழும சேர்மன் முத்துராமலிங்கம் துவக்கி வைத்தார்.
வேலம்மாள் கல்விக்குழும அறக்கட்டளையின் கீழ் செயல்படும் வண்ணம் வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ் தொடங்கப்பட்டுள்ளது. வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீஸ் என்ற அமைப்பு தேனி வி.கே வேலுச்சாமி சின்னம்மாள் கல்யாண மஹாலில் வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிந்தனை கவிஞர் டாக்டர்.கவிதாசன் விழா பேருரையாற்றினார். வேலம்மாள் கல்வி அறக்கட்டளை துணை தலைவர் கணேஷ் நடராஜன் மற்றும் கல்வி ஆலோசகர் சிபிகுமரன் ஆகியோர் விரிவுரையாற்றினார்கள். இதில் வேலம்மாள் கல்வி குழும ஆசிரியர்கள், அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், சிறப்பு விருந்தினர்கள், மாணவ-மாணவியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமையேற்று பேசிய வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் கூறுகையில், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை மூலம் 1986-ல் சாதாரண கீற்றுக்கொட்டகையில் 183 மாணவர்களுடனும், 13 ஆசிரியர்களுடனும் துவங்கப்பட்டது. இன்று 65 கல்வி நிறுவனங்களையும், 12500 ஊழியர்களையும், 1.25 இலட்சம் மாணவர்களையும் கொண்டு பணியாளர்களின் உதவியாலும், பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வேலம்மாள் கல்வி அறக்கட்டளையானது, கல்வி பணி மட்டுமின்றி சமுதாயப்பணிகளிலும் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. உதாரணமாக கார்கில், குஜராத் பூகம்பம், ஒரிசா புயல், கேரளா இயற்கை பேரழிவு, தமிழ்நாட்டில் சுனாமி, கஜாபுயல் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளது. அம்பத்தூர் எஸ்டேட் அயம்பாக்கம் சாலை, டி.எஸ்.கிருஷ்ண நகர் ஸ்கூல் ரோடு, தேனி குமுளி ரோடு வேலம்மாள் இணைப்பு சாலை, மதுரை மாட்டுதாவணியில் கழிப்பறை கட்டியது, பனையூர் கண்மாயில் உள்ள கருவேல மரங்களை ரூ.18 இலட்சம் செலவில் அகற்றி சுத்தம் செய்தது. ஹர்வர்டு தமிழ் இருக்கை அமைக்க பங்காற்றியது. வருடந்தோறும் 2500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 100 மற்றும் 50 சதவீதம் கல்வி சலுகை வழங்கி உள்ளது.
இந்த சமுதாய பணியினை விரிவு படுத்தும் விதமாக வேலம்மாள் சமுதாயப்பணி என்கின்ற அமைப்பின் மூலம் மருத்துவ சேவையையும், கல்விப்பணியையும் முழுமையாக தொடர திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கண்கெடுப்பு செய்ய முடிவு செய்யபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு எடுக்கப்படும் கணக்கெடுப்பின் அடிப்படையில், 12-ம் வகுப்பில் 90 சதவீதம் மதிப்பெண்கள் பெறும், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்களுக்கு ரூ.25000 வீதம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 10 பேருக்கு கல்வி உதவிதொகை வழங்குவது, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, நீட், ஜேயி மெயின் முதலிய தேர்வுகளில் பங்குபெற பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய 54 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விடுதிக்கட்டணத்துடன் கூடிய கல்வி கட்டண வசதி அளிப்பது, ஆசிய அளவில், உலகளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்குபெற தகுதி வாய்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள் 9 பேரை தேர்வு செய்து அதற்கான செலவுகளை ஏற்பது, மேற்கண்ட 9 மாவட்டங்களிலுள்ள படித்த வேலை தேடும் இளைஞர்களைத் தேர்வு செய்து ஒரு மாவட்டத்திற்கு 50 பேர் வீதம் நியமனம் செய்து, வேலை வாய்ப்பளித்து வேலம்மாள் கம்யூனிட்டி சர்வீசஸ்-க்கு உதவியாளர்களாக நியமிப்பது, 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம், இரயில்வே, வங்கி, இராணுவம் போன்ற துறைகளில் நுழைய வழிகாட்டுவதற்காக பயிற்சி அளிப்பது, கிராமப்புறங்களில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய நோயாளிகளை கண்டறிந்து மருத்துவ உதவி அளிப்பது, வேலம்மாள் மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ஆழ்ந்த மருத்துவ அறிவு பெற புறநோயாளிகள், உள்நோயாளிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதன் மூலம் சுமார் 2000 நபர்களுக்கு வேலைவாய்;ப்பு அளிப்பது என்ற குறிக்கோளுடன் செயல்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


