கலவரம் எதிரொலி: இலங்கையில் சமூக வலைதளங்கள் முடக்கம்

திங்கட்கிழமை, 13 மே 2019      உலகம்
facebook 13 05 2019

Source: provided

 கொழும்பு : இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் வெடித்த நிலையில், இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கை முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து இலங்கை மெல்ல மீண்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபமில் கலவரம் வெடித்தது. சமூக வலைத்தளத்தில் வெளியான விரும்பத்தகாத பதிவால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை 6 மணி வரை அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பட்டது. 

இந்த நிலையில், பதற்றம் காரணமாக இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்கி இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து