முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிராகன் குறித்து ஆய்வு செய்ய நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி

புதன்கிழமை, 15 மே 2019      உலகம்
Image Unavailable

வெலிங்டன், டிராகன் குறித்து ஆய்வு மேற்கொள்ள, 8 வயது சிறுமி நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து அனுப்பி வைத்தாள்.

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 வயது சிறுமி அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்த கடிதத்தில், தான் டிராகன்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், எனவே அரசு சார்பில் டிராகன் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சிறுமி குறிப்பிட்டு இருந்தார். மேலும் அவள், அந்த கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து, அனுப்பினாள்.

சிறுமியின் இந்த கடிதத்தை வேடிக்கையாக நினைத்து, புறக்கணிக்காமல் பிரதமர் ஜெசிந்தா தனது கைப்பட கடிதம் எழுதி, அவளுக்கு பதில் அனுப்பினார். அதில் அவர், டிராகன்கள் மற்றும் உளவியல் குறித்த உங்களது ஆலோசனைகளை கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது குறித்து எந்த பணிகளையும் நாங்கள் மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்திருந்தார். மேலும், நீங்கள் அளித்த லஞ்சத்தை என்னால் ஏற்று கொள்ள முடியாது. அதனால் அதை திருப்பி தந்து விடுகிறேன். எனினும் டிராகன்கள் மற்றும் நுண்ணுணர்வு குறித்த உங்களது தேடல் சிறப்பாக தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அந்த கடிதத்தில் ஜெசிந்தா குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து