உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை: மே 25-ல் நியூசிலாந்துடன் இந்திய அணி பலப்பரீட்சை

செவ்வாய்க்கிழமை, 21 மே 2019      விளையாட்டு
india team 2019 05 21

லண்டன் : உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் அட்டவணை வெளியாகியுள்ளது. மே 25-ல் நியூசிலாந்துடனும், மே 28-ம் தேதி வங்கதேசத்துடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

22-ம் தேதி...

2019 உலகக் கோப்பை தொடரில் புள்ளிப்பட்டியல் அடிப்படையில் 8 அணிகள் நேரடியாகவும் மேற்கு இந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் போட்டி ஆட்டங்களில் வெற்றி பெற்றும் தேர்வு செய்யப்பட்டது. 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை எதிர்கொள்ள வேண்டும். முதல் போட்டியில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வீரர்கள் வரும் 22-ம் தேதி இங்கிலாந்து புறப்பட உள்ளனர்.

உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. மே 25-ம் தேதி நியூசிலாந்தையும், மே 28-ம் தேதி வங்கதேசத்தையும் இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது.

போட்டி அட்டவணை:

மே 24: பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் - இலங்கை vs தென் ஆப்ரிக்கா.
மே 25: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா இந்தியா vs நியூசிலாந்து.
மே 26: தென் ஆப்ரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான்vs வங்கதேசம்.
மே 27: இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா vs இலங்கை.
மே 28: இந்தியா vs வங்கதேசம் - நியூசிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்.
உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்கள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து