கார் மீது மினி பஸ் மோதல் - ரஷ்யாவில் 8 பேர் பரிதாப பலி

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      உலகம்
bus collision russia 2019 06 16

மாஸ்கோ : ரஷ்யாவில் கார் மீது மினி பஸ் மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

ரஷ்யாவின் வொரொனஸ் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. வொரொனஸ் - லூஹான்ஸ்க் நெடுஞ்சாலை அருகில் கார் சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த மினி பஸ் கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து