முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் 20-ம் தேதி வெளியாகும் - அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 20-ம் தேதி வெளியாகும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களது சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி கடந்த 13-ம் தேதி வரை நடைபெற்றது. இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்து. இந்த  நிலையில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு வரும் 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராமல் இருந்தவர்கள், சரியான சான்றிதழ்களை கொடுக்கத் தவறியவர்கள் ஆகியோர் இந்த தேதி மாற்றத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வரும் 20-ம் தேதி அன்று பொறியியல் படிப்புகளில் சேரும் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தரவரிசைப் பட்டியல் அன்றைய தினம் வெளியாவதால், கலந்தாய்வு தேதி மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து