எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு அமர்வு வருகின்ற 21-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு அமர்வு இந்திய அளவில் 8 மாநிலங்களை தேர்வு செய்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களை உள்ளடக்கி ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைமை இடமாக தேர்வு செய்து வருகின்ற 21.06.2019 வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்த அமர்வு நடைபெற உள்ளது. இந்த அமர்வில் 10 மாவட்ட சிறப்பு அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த பல்வேறு துறை அலுவலர்களும் அமர்வில் கலந்து கொள்ள உள்ளனர்.
எனவே பொதுமக்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் குழந்தைகளின் உரிமை மீறல் சம்பந்தமான பிரச்சனைகள், பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகள், பள்ளி இடைநிற்றல் குழந்தை, உடல்ரீதியான தண்டனைக்கு உள்ளான குழந்தை மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இழப்பீட்டுத் தொகை பெறுவது போன்ற குழந்தைகளின் உரிமை மீறல் சம்பந்தமான பிரச்சனைகளை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள், குழந்தைகள் ஆகியோர் நேரடியாக அமர்வில் கலந்து கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


