இரை தேடி ஊருக்குள் அலையும் பனிக்கரடி

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2019      உலகம்
Bear 2019 06 21

ரஷியாவின் வடக்கு பகுதியில் சைபீரியாவில் உள்ள நோரில்ஸ்க் நகரில் உடல் மெலிந்த நிலையிலும், பசியால் வாடிய நிலையிலும் பனிக்கரடி ஒன்று சுற்றித் திரிந்து வருகிறது. ஆர்க்டிக் பனிப்பகுதியில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் காரணமாக போதிய இரை கிடைக்காமல் 100 கி.மீ. கடந்து, இந்த பெண் பனிக்கரடி நகரத்துக்குள் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இரை தேடி குப்பை மேடுகளிலும், சாலையிலும் சுற்றித் திரியும் கரடியை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். ஒரு சிலர் கரடியுடன் புகைப்படம் எடுக்கின்றனர். அந்த கரடியை பிடித்து, ஹெலிகாப்டர் மூலம் அதன் வாழ்விடத்தில் கொண்டுவிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள உள்ளூர் அதிகாரிகள், அதுவரை மக்கள் அந்த கரடியை தொந்தரவு செய்யாமல் இருக்கும்படி கேட்டுக் கொண்டு உள்ளனர். சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு, பனிக்கரடி மீண்டும் ரஷ்ய நகருக்குள் வந்துள்ளதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து