முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னாப்ரிக்க அணியுடன் தோல்வி: அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை அணி ?

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாப்ரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது.

203 ரன்கள்...

உலகக் கோப்பை தொடரில் தென்னாப்ரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி செஸ்டர்-லி-ஸ்டீட் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இலங்கை அணியில் கருணரத்னே முதல் பந்திலே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பெராரா, பெர்னாண்டோ தலா 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருவர் கூட 30 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவரில் 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென்னாப்ரிக்கா அணியில் மோரிஸ், ப்ரிடோரியஸ் தலா மூன்று விக்கெட் சாய்த்தனர். ரபாடா இரண்டு விக்கெட் எடுத்தார்.

டு பிளசிஸ் 96 ரன்...

204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்ரிக்க அணியில் டி காக் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், அம்லா, கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இவர்களின் விக்கெட்டை எடுக்க இலங்கை முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்ததோடு, வெற்றி இலக்கையும் ஆட்டமிழக்காமல் எட்டினர். 37.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து தென்னாப்ரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டு பிளசிஸ் 96, ஆம்லா 80 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். தென்னாப்பிரிக்காவிற்கு இது ஆறுதலான வெற்றியாக அமைந்த போதிலும், இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து