ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: பாகிஸ்தானுக்கு 228 ரன்கள் இலக்கு

சனிக்கிழமை, 29 ஜூன் 2019      விளையாட்டு
Pak - Afg match 2019 06 29

  1. லீட்ஸ் : உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 228 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான் அணி.

ரஹமத் 35 ரன்...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று லீட்சில் நடைபெற்ற 36-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதின.டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்பதின் நயீப் பேட்டிங் தேர்வு செய்தார். ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹமத் ஷா, குல்பதின் நயீப் களமிறங்கினர். நயீப் 15 ரன்னிலும், ஹஸ்மதுல்லா ஷஹிதி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய ரஹமத் ஷா 35 ரன்னில் அவுட்டானார்.

227 ரன் இலக்கு...

ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய அஸ்கர் ஆப்கன் 42 ரன்னிலும், நஜ்புல்லா சட்ரன் 42 ரன்னிலும் வெளியேறினர். மற்ற வீரர்கள் ரன்கள் எடுக்கவில்லை. இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு 228 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் சார்பில் ஷஹிப் அப்ரிதி 4 விக்கெட்டும், இமாத் வாசிம், வஹாப் ரியாஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து