Idhayam Matrimony

பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு எடுத்தது ஏன்? பார்லி.யில் சோனியா கேள்வி

செவ்வாய்க்கிழமை, 2 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி  : பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு எடுத்தது ஏன்? என்று பாராளுமன்றத்தில் சோனியா காந்தி காரசாரமாக பேசினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பாராளுமன்ற தொகுதியான ரேபரேலி நகரில் உள்ள அதிநவீன ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்பட ரெயில்வே துறையை சேர்ந்த 6 அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இந்நிலையில், இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காரசாரமாக உரையாற்றினார். இது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் அனைத்தையும் தனியார்மயமாக்கும் நோக்கத்தின் முதல்படியாகும். இந்த நாட்டின் சொத்துகளை எல்லாம் ஒருசில தனி நபர்களுக்கு மலிவான விலையில் இந்த அரசு விற்றுவிடப் பார்க்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்று சோனியா குற்றம் சாட்டினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு முன்னோடியாக ஏராளமான பணத்தை முதலீடு செய்து ரேபரேலியில் உள்ள அதிநவீன ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இன்று மிகக்குறைந்த செலவில் தரமான ரெயில் பெட்டிகள் இங்கு தயாரிக்கப்படுகிறது. சுமார் 2 ஆயிரம் பேர் இங்கு பணியாற்றுகிறார்கள். இதை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்தது ஏன்? என்பது புரியவில்லை. பொதுத்துறை நிறுவனங்களின் நோக்கம் மக்களின் நலம் சார்ந்ததாகத்தான் இருக்க வேண்டும். முதலாளித்துவத்தை ஆதரிப்பதாக இருக்க கூடாது என்றார். எச்.ஏ.எல். மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் இன்று தள்ளாட்டத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டிய சோனியா காந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் நேரு பொதுத்துறை நிறுவனங்களை நவீன இந்தியாவின் கோவில்கள் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், இன்று இந்த கோவில்களை ஆபத்து சூழ்ந்திருப்பதை பார்க்கும் போது கவலையாக உள்ளது என்று சோனியா தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து