முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பா.ஜ.க. உள்ளது - மல்லிகார்ஜூன கார்கே சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பா.ஜ.க. உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகத்தில் முதல்வர் மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சிக்கு நியமன எம்.எல்.ஏ. உள்பட 225 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 120 பேரின் ஆதரவு இருந்து வருகிறது. இவர்களில் அமைச்சர் பதவி கிடைக்காமல் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். இதை பயன்படுத்தி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, 105 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜ.க. காய்களை நகர்த்துவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதற்கான கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இல்லாத நிலையில், அவரது செயலாளரிடம் கொடுத்தனர். அதன் பின், அவர்களில் 10 பேர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்று மும்பை சோபிடெல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பா.ஜ.க. உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த கூட்டணி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்த சூழ்நிலையை சுமூகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டணிக்குள் குழப்பம் விளைவித்து எங்களை பிரிக்கம் பணிகள் நடந்து வருகிறது. கர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பா.ஜ.க. உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து