முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் : கோலி, டோனிக்கு ஓய்வு ; ரோகித் சர்மா கேப்டன்?

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் கோலி, டோனிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மான்செஸ்டரில் புதன்கிழமை நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், டோனி தனது ஓய்வை அறிவிக்கலாம் என்ற செய்திகள் உலவி வருகிறது. டோனி இன்னும் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை எனவும், அவரது வார்த்தைக்காக தான் காத்துக் கொண்டிருக்கிறோம் எனவும் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்த மாதம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல உள்ளது.

அங்கு மூன்று 20 ஓவர் போட்டிகள் (ஆகஸ்ட் 3 முதல் 8 வரை), ஆகஸ்ட் 8 முதல் 14 வரை 3 ஒருநாள் தொடரும், ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 3 வரை 2 டெஸ்ட் போட்டிகளும் நடைபெறும். இதற்கான அணி தேர்வு, வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மும்பையில் நடக்கவுள்ளது. இதில் டோனிக்கு ஓய்வளிக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட உள்ளது. இந்த தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து