முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வான் எல்லைப் பகுதி பிரச்சினை: இந்தியாவுக்கு பாக். கண்டிஷன்

சனிக்கிழமை, 13 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : விமானப்படை தளங்களில் தயார் நிலையத்தில் வைத்துள்ள போர் விமானங்களை இந்தியா அகற்றாதவரை அந்நாட்டுக்கு, எங்கள் வான் எல்லை திறக்கப்படாது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதில் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தான் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தடை விதித்தது. பாகிஸ்தான் விமானங்கள் இந்திய பகுதியில் பறக்க இந்தியாவும் தடை விதித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை செயலர், ஷாருக் நுஸ்ரத், அந்த நாட்டின் பாராளுமன்ற நிலைக்குழுவிடம் கூறியதாவது:-

 இந்தியாவின் விமானப்படை தளங்களில் பாகிஸ்தானை நோக்கி போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. இந்த விமானங்களை இந்தியா அகற்றாதவரை அந்நாட்டுக்கு, நம் வான் பகுதியை திறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. பாகிஸ்தான் வான்பகுதியை திறந்து விடுமாறு இந்திய தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பாகிஸ்தானின் நிலை இந்தியாவிடம் உறுதிபட தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் விமானங்கள், இந்திய வான்பகுதியில் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை. இந்திய வான்பகுதி திறக்கப்படாததால், தாய்லாந்துக்கும், மலேஷியாவுக்கும், பாகிஸ்தான் விமானங்கள் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து