நிலவில் நீண்ட காலம் மனிதன் தங்குவதற்கான ஆராய்ச்சியில் நாசா

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2019      உலகம்
NASA 2019 04 02

நிலவில் நீண்ட காலம் மனிதன் தங்குவதற்கான ஆராய்ச்சியில் நாசா ஈடுபட்டுள்ளது. மேலும் மனிதன் நிலவுக்கு செல்கிறான். இந்த முறை அங்கேயே தங்குகிறான் என்று நாசா டுவீட் செய்துள்ளது.

நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளில் நாசா ஈடுபட்டு வருகிறது. இந்த முறை விண்வெளி வீரர்களை நிலவில் தங்க வைத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நாசா திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களை நாட உள்ளது. நிலவின் சுற்றுப்பாதையில் ஆழ்ந்த வெளி நுழைவு வாயிலை அமைக்கும் திட்டத்தை நாசா முன்னெடுத்து வருகிறது. செவ்வாய் கிரகம் உள்பட ஆழமான விண்வெளி இலக்குகளை அடைய அங்கு விண்வெளி மையத்தை கட்டும் சவாலான பணிகளுக்கான தேவையான அமைப்புகளை சோதனை செய்ய விண்வெளி வீரர்கள் தொடங்கி உள்ளனர். நிலவுக்கு அருகில் உள்ள விண்வெளி பகுதியானது மனித ஆற்றலுக்கான அனுபவத்தை பெறுவதற்காக ஒரு உண்மையான ஆழமான சூழலை வழங்குகிறது.

நிலவில் நீண்ட காலம் தங்குவதற்கான ஆராய்ச்சிக்கு நாசா தயாராகி வருகிறது. இந்த தங்குமிடம் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கான நிறுத்துமிடமாக அல்லது வழி நிலையமாகவும் செயல்படும். இது குறித்து நாசா வெளியிட்டு உள்ள ஒரு டுவிட்டில்,

நாங்கள் நிலவுக்கு போகிறோம் - இந்த சமயம் அங்கே தங்குகிறோம் என கூறி உள்ளது. ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் பணிபுரியும் நாசா ஸ்பேஸ் சூட் பொறியாளர் லிண்ட்சே அட்சீசன் கேள்வி பதில் அமர்வின் இணைப்பைப் பகிர்ந்துள்ளார். வரும் 2028-ல் ஒரு குழுவினரை நிலவின் மேற்பரப்புக்கு அனுப்பும் குறிக்கோளுடன் 2024 முதல் நிலவில் புதிய மனித வர்க்க லேண்டர்களை சோதிக்க நாசா திட்டமிட்டுள்ளது.

இப்போது, அரை நூற்றாண்டில் முதல்முறையாக, நாசாவின் ஆர்ட்டெமிஸ் பணிகள் விஞ்ஞானிகளையும், பொறியியலாளர்களையும் மேற்பரப்பை மிக நெருக்கமாக ஆராய அனுமதிக்கும். ரெகோலித் எனப்படும் நிலவின் மண்ணின் குறுக்கே எவ்வாறு பாதுகாப்பாக செல்லலாம் என்பதை இது நமக்குக் கற்பிக்கும். அதன் மேல் உள்கட்டமைப்பை எவ்வாறு உருவாக்குவது, மனிதர்களை விண்வெளியில் பாதுகாப்பாக வைத்திருப்பது எப்படி? விஞ்ஞானிகள் நிலவில் உருவாக்கும் நுட்பங்கள், செவ்வாய் போன்ற தொலைதூர இடங்களை மனிதர்கள் பாதுகாப்பாகவும், நிலையானதாகவும் ஆராய்வதை சாத்தியமாக்கும் என நாசா தரப்பில் கடந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டம் முதல் பெண்ணை நிலவுக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மனிதன் நிலவில் இறங்கியது முதலும், கடைசியுமாக அன்றுதான். நிலவுக்கு மனிதனை அனுப்ப மற்ற நாடுகள் முயற்சி மேற்கொண்டு வந்தாலும், இதுவரை அம்முயற்சி கைகூடவில்லை. மனித வரலாற்றின் மகத்தான அந்நிகழ்வு 1969-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி நிகழ்ந்தேறியது. மனிதன் நிலவில் இறங்கிய அந்நிகழ்வு பெரிதாக கூறப்பட்டு வந்தாலும், உண்மையிலேயே மனிதன் நிலவில் கால்பதித்தானா? அது குறித்து அமெரிக்கா வெளியிட்ட வீடியோ காட்சி உண்மையானதுதானா? என்ற கேள்வியும் ஒருபுறம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டே வருகிறது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து