Idhayam Matrimony

வீட்டில் தங்க அனுமதி வேண்டும்: விஜய் மனைவி சங்கீதா புதிய மனு

சனிக்கிழமை, 7 மார்ச் 2026      தமிழகம்
Sangeeta-2026-03-07

சென்னை, விஜய் வீட்டில் தங்க அனுமதி வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா மனு அளித்துள்ளார்.

விவாகரத்து வழக்கு முடியும் வரை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்குவதற்கு விஜய் அனுமதிக்க வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா மனு அளித்துள்ளார். நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் ஏப்ரல் 10 அன்று விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது. விவாகரத்து மனுவில், விஜய் மீது சங்கீதா திருமணம் மீறிய உறவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில் பலரும் இதுகுறித்து விவாதித்து வருகின்றனர். குறிப்பாக த.வெ.க. தொண்டர்கள், சங்கீதாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுகுறித்து விஜய் இன்னும் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் உள்ளார். சமீபத்தில் சென்னையில் திருமண விழா ஒன்றில் விஜய்யுடன் நடிகை த்ரிஷா ஒன்றாக பங்கேற்றது வைரலானது. இந்நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

விவாகரத்து கோரியுள்ளதால் விஜய் வீட்டில் தங்க அனுமதி வழங்கப்படவில்லை என்று மனுவில் குற்றம்சாட்டியுள்ள அவர், இந்த வழக்கில் விவாகரத்து பெறும் வரை விஜய்யின் நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தான் லண்டனைச் சேர்ந்தவர் என்பதால் வேறு எங்கும் தங்க அனுமதியில்லை என்றும் தன் வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து