Idhayam Matrimony

கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு

சனிக்கிழமை, 7 மார்ச் 2026      தமிழகம்
chennai-high-court 2022-08-29

சென்னை, கூட்டுறவுத்துறையில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட நேர் முகத்தேர்வின் முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் அஞ்சுரம்பாளையத்தைச் சேர்ந்த ஒய்.தருண்குமார் என் பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஈரோடு மாவட்ட கூட்டுறவுத் துறையில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்தாண்டு அக்டோபர் 11-ந்தேதி நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு நேர்முகத்தேர்வு கடந்த நவம்பர் 27-ந்தேதி நடத்தப்பட்டது. நேர்முகத் தேர்வு முடிந்து 3 மாதங்களாகியும் இன்னும் தேர்வு முடிவுகளை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட வில்லை.

இதுகுறித்து கேட்டபோது ஐகோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்ப தாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அந்த வழக்கு கூட்டுறவு சங்கங்களின் செயலாளர் மற்றும் உதவி செயலாளர் பணிகளுக்காக பொதுப்பிரிவு நியமனங்கள் தொடர்பானது. அந்த வழக்குக்கும், உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே உதவியா ளர், இளநிலை உதவியாளர் பணிகளுக்கு நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வின் முடிவுகளை உடனடியாக வெளியிட உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சி. பிரகாசமும், கூட்டுறவுத் துறை சார்பில் சிறப்பு அரசு பிளீடர் எம். கீதா தாமரைச் செல்வனும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கூட்டுறவுத்துறையில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட நேர் முகத்தேர்வின் முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து