சந்திராயன்- 2 விண்ணில் செலுத்தி சாதனை: விஞ்ஞானிகளுக்கு முதல்வர் இ.பி.எஸ் பாராட்டு

திங்கட்கிழமை, 22 ஜூலை 2019      தமிழகம்
CM EPS 07-10-2018

சந்திராயனை 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இந்திய விஞ்ஞானிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

சந்திராயன் 2 டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இந்திய அறிவியல் சமூகம், நாட்டுக்கு மிகப்பெரிய பணியை ஆற்றியிருக்கிறது. இது இந்தியாவின் வரலாற்றுச்சிறப்பு மிக்க சாதனை. இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் சாதனையுமாகும், இந்த மகத்தான சாதனையை புரிந்த விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சந்திராயனை விண்ணுக்கு அனுப்பிய இந்தியாவின் சாதனை இந்திய இளைஞர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சி ஈடுபட ஊக்கமும் உத்வேகமும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து