18 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இதுதான் முதல் விடுமுறை: பிரதமர் மோடி

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2019      இந்தியா
pm modi 2019 08 13

புது டெல்லி : 18 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இதுதான் தனது முதல் விடுமுறை என மேன் வெஸ் வொய்ல்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டிஸ்கவரி தொலைக்காட்சியின் மேன் வெஸ் வொய்ல்டு நிகழ்ச்சி உலக புகழ்பெற்றது. காடுகளில் சிக்கி கொள்ளும் மனிதர்கள், அதன் சூழலை சமாளித்து அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்பதை விளக்கும் நிகழ்ச்சி அது. இந்த நிகழ்ச்சியில் சாகச வீரர் பியர் கிரில்ஸ் உடன் உலக தலைவர்களும் அவ்வப்போது பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் பிரதமர் மோடி, பியர் கிரில்ஸ் உடன் இந்திய காடுகளில் சாகச பயணம் மேற்கொண்டார்.

அந்த நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஒளிபரப்பானது. நிகழ்ச்சியில் பேசிய மோடி, 18 ஆண்டு கால வாழ்க்கையில் இதுதான் தனது முதல் விடுமுறை என தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் உள்ள தேசிய வன உயிரியல் பூங்காவில் சாகச பயணம் மேற்கொண்ட மோடி, இயற்கை மீதான தனது ஆர்வம் குறித்தும் பேசினார். இமயமலைக்கு பயணம் மேற்கொள்ளும் போது ஆன்மீகம் மட்டுமின்றி இயற்கையின் அதிசயமும் தன்னை வியக்க வைக்க தவறுவதில்லை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பியர் கிரில்ஸின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, தனது பதவியை தன் தலைக்கு ஒருபோதும் கொண்டு சென்றதில்லை எனவும் தெரிவித்துள்ளார். சாகச பயணத்தின் போது, பதற்றமாக உணர்கிறீர்களா? என்ற பியர் கிரில்ஸின் கேள்விக்கு, தனது வாழ்க்கையில் பதற்றத்தை ஒருபோதும் உணர்ந்தது இல்லை எனவும் மோடி பதிலளித்துள்ளார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து