முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து - அரியானா முன்னாள் முதல்வர் ஆதரவு

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

சண்டிகர் : காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், அரியானா முன்னாள் முதல்வருமான பூபிந்தர்சிங் ஹூடா ஆதரவு தெரிவித்து உள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளன. இந்த நிலையில் காஷ்மீர் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், அரியானா முன்னாள் முதல்வருமான பூபிந்தர்சிங் ஹூடா ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக ரோத்தக் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற குடும்பத்தில் பிறந்தவன் நான். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததற்கு காங்கிரசை சேர்ந்த பல சகாக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அரசு ஏதாவது நல்லது செய்தால் அதை நான் ஆதரிப்பவன். காஷ்மீரில் நமது சகோதரர்கள் ராணுவ வீரர்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். எனவே காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவை ஆதரிக்கிறேன். 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை எதிர்ப்பவர்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். நமது பாரம்பரியத்துக்கும், கொள்கைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டால் அதை எதிர்த்து போராட வேண்டும்.காங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையுடன் செயல்படவில்லை. அது தனது தனித்தன்மையை இழந்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரசை எதிர்த்தும், மத்திய அரசை ஆதரித்தும் மூத்த தலைவர் பூபீந்தர் ஹூடா வின் கருத்தால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரியானா மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஹூடோ காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகவே அவர் காங்கிரசை விமர்சித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து