கார்த்திக் சிதம்பரத்தின் வங்கி கணக்கு விவரம்: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2019      இந்தியா
Karthik Chidambaram 2019 08 24

புது டெல்லி : கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம் அனுப்பியுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்தது. இந்த நிலையில், அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டுவதில், சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார். இந்த நிலையில் வெளிநாடுகளில் கார்த்திக் சிதம்பரம் நடத்தி வரும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கி கணக்கு விவரங்களை பெற சி.பி.ஐ. முயற்சித்து வருகிறது. அதற்காக சிங்கப்பூர், மொரீசியஸ், லண்டன்,ஸ்விட்சர்லாந்து,பெர்முடா ஆகிய 5 நாட்டு அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. கடிதம் அனுப்பியுள்ளது. அந்த விவரங்கள் கிடைத்தால் அவை ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முக்கிய ஆதாரமாக திகழும் என்று சி.பி.ஐ. கருதுகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து