முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புளோரிடாவை நோக்கி நகரும் டோரியான் புயல்

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

பஹாமா நாட்டைத் தாக்கிய டோரியான் புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

கரிபீயன் தீவுகளில் உள்ள பஹாமா மற்றும் அபகோ தீவுகளை டோரியான் புயல் தாக்கியது. இதில் பெரும் சேதம் பஹாமா தீவுகளுக்கு ஏற்பட்டுள்ளது. புயல் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு மருத்துவம் மற்றும் நீர், உணவுப் பற்றாக்குறை உள்ளதால் பஹாமா நாட்டுக்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது. பஹாமா பிரதமர் ஹுமர்ட் மின்னிஸ் கூறும் போது, நாங்கள் வரலாற்றுப் பேரழிவால் உண்டான சோகத்தில் உள்ளோம். 60 சதவீத இழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் பஹாமா நாட்டைக் கடந்த டோரியான் புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புளோரிடா, கரோலினா மாகாண ஆளுநர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். எனவே இது தொடர்பான பணியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து