முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்.15-ல் பொதுத் தேர்தல் நடத்தும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்க்கட்சிகள் தயாரா? இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சவால்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவது தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை இழந்த பிரதமர் போரிஸ் ஜான்சன், வரும் அக்டோபர் மாதம் 15-ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தும் தீர்மானத்துக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி தலைவர் தயாரா? என சவால் விடுத்துள்ளார்.

பிரக்சிட் விவகாரம் தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மை இழந்தார். இந்த திடீர் திருப்பத்தால், அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக லண்டனிலுள்ள பிரதமர் இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:

பிரக்சிட் விவகாரத்தில் எம்பி.க்கள் குழப்பத்தை ஏற்படுத்தி, நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டிய நிலையை ஏற்படுத்த வேண்டாம். அத்தகைய தேர்தலை நான் விரும்பவில்லை என்று கூறினேன். ஆனால், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தில் கன்சர்வேடிவ் எம்.பி.க்களும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால், பெரும்பான்மையை இழக்கும் சூழல் ஏற்பட்டது.

இதனால், இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்தலாம் என்று கருதுகிறேன். நாம் தான் ஒரு வாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும். எனக்கு தேர்தலில் விருப்பமில்லை. எந்த பிரச்னையையும் சீர் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் நாடாளுமன்றம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது போரிஸ் கூறுகையில், பிரக்சிட் தொடர்பான அரசின் வரைவு தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கும் லேபர் கட்சியினர், நாட்டு மக்கள் தங்களின் எண்ணத்தை பிரதிபலிக்க, நாடாளுமன்றத்துக்கு வரும் அக்டோபர் 15-ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தும் தீர்மானத்துக்கும் ஆதரவாக வாக்களிக்க தயாரா?’’ என சவால் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து