கள்ளிக்குடி ஒன்றிய அ.தி.மு.க பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரை:

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      மதுரை
12 rpu -tmm

திருமங்கலம்.- மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,கள்ளிக்குடி  ஒன்றியத்தின் பல்வேறு கிளைக்கழக கிராமங்களில் நடைபெற்ற  பூத்கமிட்டி  நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்,கழகஅம்மா பேரவைச் செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகிடும் வகையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றிய பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள்  கே.வெள்ளாகுளம்,மையிட்டான்பட்டி,நல்லமநாயக்கன்பட்டி,ஆவல்சூரன்பட்டி,உன்னிபட்டி,பேய்க்குளம்,சென்னம்பட்டி,ஓடைப்பட்டி,மேலப்பட்டி,சோளம்பட்டி ஆகிய கிளைக் கழகங்களில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இக் கூட்டத்திற்கு கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார்.கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்டபட்ட அனைத்து கிளைக்கழக பூத்கமிட்டி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்,கழக அம்மா பேரவை செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று பூத்கமிட்டி நிர்வாகிகளுக்கு விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலின் போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியின் போது கூறியதாவது: இந்திய வரலாற்றிலே ஒரு புரட்சிகரமான சாதனையாக சாமானியர் சரித்திரம் படைத்திட முடியும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலே மற்ற மாநில முதல்வர்களுக்கெல்லாம் வழிகாட்டுகின்ற வகையிலே நமது முதல்வர் எடப்பாடியார் உலக முதலீட்டாளர்களையும்,தமிழ் முதலீட்டார்களையும் தமிழகத்திற்கு கொண்டு வரும் வகையில் மேற்கொண்டுள்ள முயற்சி உலகத்திலுள்ள ஒட்டுமொத்த தமிழர்களின் பாராட்டையும்,நன்மதிப்பையும்,நம்பிக்கையையும் பெற்றுள்ளது.இதனை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின், 5முறை தி.மு.க ஆட்சியிலிருந்தபோது தங்களால் செய்ய முடியாததை ஒரு சாமானியனாகிய முதல்வர் சாதித்து காட்டியிருக்கிறாரே என்கிற அரசியில் காழ்ப்புணர்ச்சியின் எல்லையில் இன்றைக்கு பல்வேறு கருத்துக்களை பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மக்களிடம் கிடைத்துள்ள மகத்தான வரவேற்பினை பார்த்து,முதல்வர் எடுத்திருக்கிற நடவடிக்கைகள் தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்கிற அந்த நிர்வாகத் திறமை,தமிழகத்தை ஏற்றம் பெறச் செய்திட அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் மக்களிடம்மிகப் பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் செல்வாக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறது.ஆகவே இனி நம்முடை அரசியல் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்சத்தினால் இதனை வழக்கம் போல் திசை திருப்பி,வழக்கம் போல் மக்களை குழப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று குட்டையை குழப்பும் வேலையை ஸ்டாலின் துவங்கியிருக்கிறார்.சட்டசபையை நடத்த முடியாது என்று ஸ்டாலின் சொன்னார்.சட்டசபையை முதல்வர் எடப்பாடியார் நடத்திக் காட்டினார்.நிதி நிலையை தாக்கல் செய்ய முடியாது என்றார் ஸடாலின்.ஆனால் முதல்வரும் துணை முதல்வரும் நிதிநிலையை தாக்கல் செய்து சாதித்து காட்டினார்கள்.நிலையான அரசை தர முடியாது என்று அவர் சொன்னார்.ஆனால் முதல்வர் அம்மாவுடைய அரசை நிலையானதாக மாற்றி காட்டினார்.எதையெல்லாம் முடியாது என்று ஸ்டாலின் சொல்கிறாரோ அதையெல்லாம் பதட்டமின்றி லாகவமாக முடியாது என்பதை நம்முடைய முதல்வர் முடித்து காட்டி வருகிறார். சாமானிய முதல்வர்வெளிநாடுகளுக்கு சென்று திரும்புவது காலம் காலமாக வரவேற்க கூடிய ஒன்றாக இருக்கிறது.ஆனால் இங்கு மட்டும் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சனங்கள் வைக்கிறார்களே தவிர பிற மாநிலங்களில் இது போன்று நடப்பது கிடையாது.பக்கத்து மாநில முதல்வர்கள் கூட வருடத்திற்கு இருமறை வெளிநாடுகளுக்கு வந்து செல்வதாக அங்கிருப்போர் கூறுகின்றனர்.தமிழ்நாட்டை சேர்ந்த முதல்வர் வெளிநாடுகளுக்கு வரவில்லையே என்கிற ஏக்கம் எங்களுக்கு இருந்தது அதனை போக்கியவர் எடப்பாடியார் என்று அங்குள்ள முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.முதல்வரின் வெளிநாட்டு பயணம் மக்கள் மத்தியிலே  மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.இதில் எதிர்கட்சித் தலைவர் என்ன குறையை கண்டார் என்று எங்களுக்கு தெரியவில்லை.
இன்றைக்கு எதிர்கட்சி தலைவர் தனக்கென்று ஆலோசனை வழங்;குகிற குழுவை வைத்துக் கொண்டு அதன் சொற்படி தான் இன்றைக்கு செயல்பட்டு வருகிறார்.ஆனால் முதல்வரே தனக்கென்று அப்படியொரு ஆலோசனை குழுவினை வைத்துக் கொள்ளாமல் மக்கள் பணியில் பெற்ற பணியில் கிடைத்த அனுபவத்தை வைத்து செயல்பட்டு வருகிறார்.ஆகவே எதிர்கட்சி தலைவர் 110விதி தொடங்கி எல்லா சாதனைகளுக்கும் அவர் வெள்ளை அறிக்கை கேட்கிறார்.எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார் என்றால் அது வெற்றி பெற்றுவிட்டது என்றேஅர்த்தம்.முதல்வர் எதிலெல்லாம் வெற்றி பெற்றுவிட்டாரோ அதிலெல்லாம் எதிர்கட்சிதலைவர் வெள்ளை அறிக்கை கேட்பார்.110வது விதி தமிழக மக்களின் தலைவிதியை மாற்றியிருக்கிறது.குடிமராமத்து நீராதாரத்தை உயர்த்தியிருக்கிறது.ஆகவே ஸ்டாலின் வெள்ளையறிக்கை கேட்கும் திட்டங்கள் வெற்றி பெற்றிருக்கிறது,மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது என்று அர்த்தம்.அந்த வெற்றிபெற்றுள்ள திட்டங்களின் வரிசையில் தமிழக முதல்வரின் வெற்றி பயணம் இடம் பெற்றிருக்கிறது.இதன் மூலம் அவரது சாதனை உலகின் எட்டாவது அதிசயமாக உலக தமிழர்களின் இதயங்களில் இடம் பிடித்திருக்கிறார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டங்களில் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாவட்ட சார்பு அணிநிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,சிங்கராஜபாண்டியன்,பிரபுசங்கர்,வேல்பாண்டி,வேல்ராமகிருஷ்ணன், கண்ணன்,அன்னக்கொடி,சுகுமார்,செல்வம்,சாமிநாதன்,தாத்தப்பன்,மணி,முருகன்,எஸ்.பி.எஸ்.ராஜா,சிவன்காளை,ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து