முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் குறைந்த எடையில் பிறந்த அபூர்வ குழந்தை

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அமெரிக்க ராணுவ தலைமையகம் வாஷிங்டன் பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மீதும் பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதி பயங்கர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.

2001-ம் ஆண்டு, 9-வது மாதமான செப்டம்பர் மாதம் 11-ம் தேதி நடந்த இந்த தாக்குதல்கள் உலக வரலாற்றின் கரும்புள்ளியாக அமைந்துள்ளன. கடந்த 11-ம் தேதி இந்த தாக்குதலின் 18-வது நினைவு தினம் அமெரிக்கா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. அந்த நாளில் டென்னிசி மாகாணம், ஜெர்மன்டவுன் நகரில் உள்ள மெத்தடிஸ்ட் ஆஸ்பத்திரியில் இரவு 9 மணி 11 நிமிடத்தில் கேமட்ரியோன் மூர் பிரவுன் என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையின் எடை 9 பவுண்ட் 11 அவுன்ஸ் ஆகும்.9-வது மாதத்தின் 11-வது நாளில் இரவு 9 மணி 11 நிமிடத்தில் பிறந்த குழந்தையின் எடை 9 பவுண்ட் 11 அவுன்ஸ் என்பது அபூர்வ நிகழ்வாக அங்கு பார்க்கப்படுகிறது.

இதுபற்றி கேமட்ரியோன் மூர் பிரவுன் கூறும் போது, பேரழிவு மற்றும் அழிவுகளுக்கு மத்தியில் எனது மகள் புதிய வாழ்வாக அமைந்திருக்கிறாள் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்த குழந்தைக்கு பெற்றோர் கிறிஸ்டினா என பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து