முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நுழைவுத் தேர்வில் மகள் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த நடிகைக்கு சிறை

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

பாஸ்டன் : மகள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற லஞ்சம் கொடுத்த ஹாலிவுட் நடிகை ஹூப்மேனுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது

பிரபல ஹாலிவுட் நடிகை பெலிசிட்டி ஹூப்மேன். இவர் தனது மகளை பிரபல பல்கலைக் கழகத்தில் சேர்த்து படிக்க வைக்க ஆசைப்பட்டார். இதற்காக மகளை ரகசியமாக நுழைவுத்தேர்வு எழுத வைத்து அதிக மதிப்பெண்கள் தருவதற்காக அதிகாரிகளுக்கு 15 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.10.5 லட்சம்) லஞ்சம் கொடுத்துள்ளார். நடிகை ஹூப்மேன் மீது பாஸ்டன் நகரில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த மே மாதம் வழக்கு விசாரணைக்கு வந்த போது மகள் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததை ஹூப்மேன் ஒப்புக்கொண்டார். அவர் தனது செயலுக்காக கண்ணீர் சிந்தியவாறு மன்னிப்பு கேட்டார். இந்த வழக்கில் நடிகை ஹூப்மேன் குற்றவாளி என நீதிபதி இந்திரா தல்வானி தீர்ப்பு அளித்தார். அவரது தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அவருக்கு 2 வாரம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இந்திரா தல்வானி உத்தரவிட்டார். அப்போது அவர் கூறுகையில், தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகளை ஏமாற்றுவதற்கு தங்கள் செல்வ வளத்தை பயன்படுத்தக் கூடாது என்ற தகவலை சமூகத்துக்கு விடுக்க வேண்டியது அவசியம். எனவே உங்களை தண்டனையின்றி விட முடியாது என குறிப்பிட்டார். நடிகை ஹூப்மேனுக்கு 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ. 21 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து