முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து 11 பேர் உயிரிழந்த சோக நிகழ்வுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டிணம் அருகே உள்ள கண்டி போச்சம்மா கோயிலுக்கு ஆந்திர மாநில சுற்றுலாக் கழகம் சார்பில் இயக்கப்பட்ட படகு கச்சளூரு பகுதியில் ஆற்றில் கவிழ்ந்ததில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப்படையினரின் மீட்பு நடவடிக்கையில் இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுளளனர். .

ஆற்றில் படகு கவிழ்ந்து 11பேர் இறந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில்,

ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஆற்றில் படகு கவிழ்ந்து மூழ்கிய செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவிக்கிறேன். சோக நிகழ்வு நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில், ஆந்திராவில் கோதாவரி படகு விபத்தில் பலியானவர்களை நினைத்து வேதனைப்படுகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறேன். காணாமல் போனவர்களை உயிருடன் மீட்க நான் இறைவனை வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து