கென்யாவில் வகுப்பறை இடிந்து விழுந்து 7 குழந்தைகள் பலி

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019      உலகம்
kenay classroom fell 2019 09 23

நைரோபி : கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நேற்று  பள்ளியின் வகுப்பறை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியின் டகோரேட்டி புறநகர் பகுதியில் ஏராளமான ஏழை, எளிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வாழ்வாதாரத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளில் ஒன்றான வீடின்றி இவர்களில் பலர் கூடாரம் அமைத்து குடும்பம் நடத்துகின்றனர்.

இங்குள்ள குழந்தைகள் படிப்பதற்காக இயங்கிவரும் திறன் மேம்பாட்டு பள்ளியில் நேற்று  காலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, ஒரு வகுப்பறை திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது.

இந்த இடிபாடுக்குள் வகுப்பில் இருந்த குழந்தைகள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து விரைந்துவந்த ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் 7 பிரேதங்களை கண்டெடுத்தனர். உயிருடன் மீட்கப்பட்ட மேலும் பல குழந்தைகள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து