ஜிம்னாஸ்டிக்சில் புதிய வரலாறு படைத்தார் அமெரிக்க வீராங்கனை

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      விளையாட்டு
US Player new history gymnastics 2019 10 14

ஸ்டட்கர்ட் : உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடந்து வந்தது. பெண்களுக்கான புளோர் பிரிவில் தனது சாகசத்தை காட்டி சிலிர்க்க வைத்த அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் மொத்தம் 15.133 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதே போல் பேலன்ஸ் பீம் பிரிவிலும் சிமோன் பைல்ஸ் மகுடம் சூடினார். இந்த தொடரில் இது அவரது 5-வது தங்கமாகும். இதன் மூலம் உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் அவரது ஒட்டுமொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. உலக ஜிம்னாஸ்டிக்ஸ் வரலாற்றில் பெலாரஸ் வீரர் விடாலி ஸ்செர்போ 23 பதக்கம் வென்றதே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. அவரை 22 வயதான சிமோன் பைல்ஸ் பின்னுக்கு தள்ளி புதிய சரித்திரம் படைத்திருக்கிறார். இவர் ரியோ ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்றது நினைவு கூரத்தக்கது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து