முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 31-ம் தேதிக்குள் பிரெக்சிட்டை நிறைவேற்ற முன்னுரிமை வழங்கப்படும் - பிரிட்டன் பாராளுமன்றத்தில் ராணி உரை

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : வருகிற 31-ம் தேதிக்குள் பிரெக்சிட்டை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கூறினார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் நடவடிக்கைக்கான காலக்கெடு வருகிற 31-ம்தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் பிரெக்சிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் எம்.பி.க்கள் தொடர்ந்து நிராகரித்து வருவதால் ஒப்பந்தமில்லா பிரெக்சிட்டுக்கு வாய்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்த நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் பிரிட்டன் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றினார். அப்போது அவர் 31-ம் தேதிக்குள் பிரெக்சிட்டை நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், திட்டமிட்டபடி 31-ம் தேதிக்குள் பிரெக்சிட்டை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அரசு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து