தீபாவளி பண்டிகை- மேலும் 458 அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு வசதி

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019      தமிழகம்
deepawali reservation govt buses 2019 08 26

தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 25 மற்றும் 26-ந்தேதி பயணம் செய்ய இடங்கள் நிரம்பி விட்டதால் மேலும் 458 விரைவு பஸ்களில் முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

 
தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு சார்பில் 10,500 சிறப்பு பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பயணிக்க வசதியாக 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது.

நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லவும், வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பவும் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு விரைவு பஸ்கள் 1182 இயக்கப்படுகிறது. இதில் 492 பஸ்களுக்கு மட்டும்தான் முன்பதிவு தற்போது செய்யப்படுகிறது. 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தீபாவளி பயணத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர், கோவை, சேலம், பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு செல்லக் கூடிய விரைவு பஸ்களில் 25 மற்றும் 26-ந்தேதி பயணம் செய்ய இடங்கள் நிரம்பி விட்டதால் மேலும் 458 விரைவு பஸ்கள் முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக விடப்பட்டுள்ளது. 25-ந்தேதி 266 பஸ்களும், 26-ந்தேதி 192 பஸ்களும் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வசதியாக விடப்பட்டுள்ளது.

மொத்தம் 950 விரைவு பஸ்கள் முன்பதிவு திட்டத்தின் கீழ் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. விரைவு பஸ்களுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. இது தவிர கோயம்பேடு, பஸ் நிலையம், தாம்பரம், திருவான்மியூர் ஆகிய இடங்களில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம்.

தீபாவளி சிறப்பு பஸ்கள் 24-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், சித்தூர், திருப்பத்தூர், ஓசூர், தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தாம்பரம் ரெயில் நிலையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து திண்டிவனம், செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கும், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி மற்றும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், (திண்டிவனம் வழியாக), நெய்வேலி, டவுன்ஷிப், வடலூர், சிதம்பரம், காட்டு மன்னார்கோவில் (வழி பண்ருட்டி, விக்கிரவாண்டி) ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரம், ரெயில் நிலையத்தில் இருந்து 500 பஸ்களும், பூந்தமல்லியில் இருந்து 600 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் (கிழக்கு கடற்கரை சாலை வழியாக), மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை, காளஹஸ்தி, திருப்பதி, நெல்லூர் பகுதிக்கும் இயக்கப்படுகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து விழுப்புரம், ஊளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், திட்டக்குடி, திருககோவிலூர், ஜெயங்கொண்டம், அரியலூர் மற்றும் தென் மாவட்டங்களுக்கு புறப்பட்டு செல்கிறது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து