காதலரை மணந்தார் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      உலகம்
Jennifer Lawrence married lover 2019 10 20

வா‌ஷிங்டன் : ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ், காதலர் குக் மரோனி திருமணம் ரோட் தீவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ் (வயது 29). இவர் காதல், நகைச்சுவை கலந்த சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது உள்பட பல விருதுகளை அள்ளியவர். குக் மரோனி என்ற கலைப்பொருள் வியாபாரியை அவர் காதலித்து வந்தார். இருவரும் பல இடங்களில் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். இது தொடர்பாக ஹாலிவுட் பட உலகில் கிசுகிசுக்கள் வலம் வந்தன. ஒரு கட்டத்தில் ஜெனிபர், தன் காதலர் குக் மரோனியை நியூயார்க் நகரில் திருமணம் செய்து கொண்டதாகவெல்லாம் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில், ஜெனிபர் லாரன்ஸ், குக் மரோனி மணவிழா அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள நியூபோர்ட் நகரில் 19-ம் தேதி நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்தன. அது உண்மைதான். திருமணத்துக்காக ஜெனிபரும், குக் மரோனியும் தனியார் விமானம் மூலம் நியூபோர்ட் நகருக்கு வந்தனர். அங்கு அவர்களின் மண விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. இந்த திருமண விழாவில் ஜெனிபர் மற்றும் குக் மரோனி ஆகியோரின் குடும்பத்தினர், நண்பர்கள் என 150 பேர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்..

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து