முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா இஸ்லாமிய ஜிஹாத் தளபதி கொலை

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

தெஹ்ரான் : இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய ஜிஹாத் தளபதி பஹா அபு எல்-அட்டா கொல்லப்பட்டார்.  

சர்வதேச அளவில் ஆதரவு பெற்ற பாலஸ்தீனிய அதிகாரசபையிலிருந்து 2007ல் காசாவை வலுக்கட்டாயமாகக் ஹமாஸ் கைப்பற்றியதிலிருந்து, இஸ்ரேல் மற்றும் காசா போராளிகள் மூன்று போர்களை நடத்தினர். 2014ல் மூன்றாவது போர் 50 நாட்கள் நீடித்தது. இதனால் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது.

இதுபோல் அடிக்கடி வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது சுமார் 10 ஏவுகணைகள் வீசப்பட்டன. இதற்கு அபு எல்-அட்டா தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. 

இந்த நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் மூத்த இஸ்லாமிய ஜிஹாத் ஈரானிய ஆதரவு தளபதி பஹா அபு எல்-அட்டா கொல்லப்பட்டார். வான்வழித் தாக்குதலில் ஒரு ஆணும் பெண்ணும் கொல்லப்பட்டதாகவும் மேலும் இரண்டு பேர் காயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு உள்ள தகவலில் தெஹ்ரானில் தெற்கு இஸ்ரேல் சமூகங்களுக்கு எதிராக சமீபத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அபு எல் -அட்டா தான் காரணம் . இதை தொடர்ந்து உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது.என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து