நத்தம் கைலாசநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2019      திண்டுக்கல்
18 nathan kovil

நத்தம்- - திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவார விழா நடந்தது. இதையொட்டி மூலவர் கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.முன்னதாக உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து