முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை தோற்கடிப்பதே எங்கள் இலக்கு: சித்தராமையா

வியாழக்கிழமை, 21 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

மைசூரு : கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை தோற்கடிப்பது ஒன்றே காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் ஒரே குறிக்கோள் என்று சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வருகிற டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு காரணமாக இருந்த தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்து அந்த கட்சி சார்பில் போட்டியிடுகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வரும், கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரசில் நான் தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாக முதல்வர் எடியூரப்பா அடிக்கடி கூறி வருகிறார். அவருக்கு நான் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அவரது இந்த ஆசை நிறைவேறாது. காங்கிரஸ் எனக்கு ஆதரவாக உள்ளது. கட்சி தலைவர்களும் என்னை ஆதரிக்கிறார்கள். ஏமாற்றத்தில் இருக்கும் எடியூரப்பா இவ்வாறு பேசுகிறார். பிற கட்சிகளின் தலைவர்கள் என்னை இலக்காக கொண்டு பேசுகிறார்கள். தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களுக்கும் நானே இலக்கு. இந்த  இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் முதல் குறிக்கோள். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து