எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்;டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நமது இந்திய தேசம் உலகின் மிகப்பெரிய குடியரசு நாடு ஆகும். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்குமான அடிப்படை உரிமைகள், குடிமக்களின் கடமைகள், அரசின் உத்தரவு கொள்கைகள் என அனைத்தையும் வரையறுத்து உச்சபட்ச சட்டமாக விளங்குவது இந்திய அரசியலமைப்புச் சட்டமாகும். இச்சட்டமானது நவம்பர் 26, 1949-ஆம் ஆண்டு முதன்முதலில் இயற்றப்பட்டு, ஜனவரி 26-ஆம் நாள் 1950-ஆம் ஆண்டு முழுமையாக செயல்படுத்தப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் நாள் குடியரசு தினமாக நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நவம்பர் 26-ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜி.கோபு, அலுவலக மேலாளர் (குற்றவியல்) கோவிந்தன் உட்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


