முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழக அணி அரைஇறுதிக்கு தகுதி

வியாழக்கிழமை, 28 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

சூரத் : சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் லீக் சுற்று ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் நடந்து வருகிறது.

இதில் ‘பி’ பிரிவில் தமிழ்நாடு - ஜார்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் அணி, தமிழக வீரர்களின் மாயாஜால சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. ஜார்கண்ட் அணி 18.1 ஓவர்களில் 85 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் சவுரப் திவாரி 24 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். தமிழக அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சித்தார்த் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், சாய் கிஷோர், எம்.அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய தமிழக அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹரி நிஷாந்த் 7 ரன்னிலும், ஷாருக்கான் 24 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 38 ரன்னுடனும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 13 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 4 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்ற தமிழக அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து