பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன்

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      தமிழகம்
nirmala devi 2018 04 16

ஸ்ரீவில்லி : கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தி நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து மதுரை காமராஜர் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு வரும்போது நிர்மலாதேவி சரிவர ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து நிர்மலா தேவியை போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். நிர்மலாதேவி ஜாமீன் வழங்கக் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதனை நேற்று விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணைக்கு வரும் போது முறையாக ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தி நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து