முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரி-சென்னை வரை ஒற்றை காலால் சைக்கிள் ஓட்டி காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாற்றுத்திறனாளி வாலிபர்:

செவ்வாய்க்கிழமை, 17 டிசம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை 1300கி.மீ தூரததிற்கு ஒற்றைக் காலால் சைக்கிள் ஓட்டியபடி காற்று மாசுபாடு குறித்து விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறன் கொண்ட பட்டதாரி வாலிபர் வி.மணிகண்டனுக்கு திருமங்கலம் பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை குடியிருப்பின் பின்புறம் உள்ள திருநகரைச் சேர்ந்தவர் வி.மணிகண்டனர்.முதுநிலை பட்டதாரி வாலிபரான இவர் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் இடது காலை இழந்தார்.இருப்பினும் மனம் தளராத மணிகண்டன் நதிநீர் இணைப்பு,மழைநீர் சேகரிப்பு,பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு,மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒற்றைக் காலில் சைக்கிள் ஓட்டி சாதனை பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.முதலில் சிவகங்கை-சென்னை,இராமேஸ்வரம்-கன்னியாகுமரி வரையிலான விழிப்புணர்வு பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.தற்போது காற்று மாசுபாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையில் வாலிபர் மணிகண்டன் கன்னியாகுமரி முதல் சென்னை வரையில் 1300கி.மீ தூரத்திற்கு ஒற்றைக் காலில் சைக்கிள் ஓட்டிடும் சாதனை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி கடந்த 13ம் தேதி கன்னியாகுமரியில் தனது நண்பர் விவேக் உதவியுடன் விழிப்புணர்வு சாதனை பயணத்தை துவங்கிய மணிகண்டன் திருநெல்வேலி, தூத்துக்குடி,விருதுநகர் வழியாக நேற்று இரவு திருமங்கலம் நகரை வந்தடைந்தார்.அவருக்கு திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து பொதுமக்கள் அன்போடு உற்சாக வரவேற்பு கொடுத்து உபசரித்தனர். இதனை தொடர்ந்து தான் கொண்டு வந்திருந்த மரக்கன்றுகளை ஆங்காங்கே நட்ட மணிகண்டன் காற்று மாசுபடுவதை தடுப்பதில் மரங்களின் பங்கு குறித்து அங்கிருந்தவர்களிடம் விளக்கி கூறினார்.பின்னர் நேற்று காலை தனது பயணத்தை துவங்கிய மணிகண்டனை திருமங்கலம் பகுதி மக்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.இதனை தொடர்ந்து மதுரை,திண்டுக்கல்,திருப்பூர், கோவை,ஈரோடு,சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி,வேலூர்,திருவண்ணாமலை,காஞ்சீபுரம்,திருவள்ளுர் வழியாக வரும் ஜனவரி 1ம் தேதி ஒற்றை காலில் சைக்கிள் ஓட்டி காற்று மாசுபாடு குறித்த வழிப்புணர்வு பயணத்தை மாற்றுத்திறனாளி வாலிபர் வி.மணிகண்டன் நிறைவு செய்கிறார்.இவரை வாழ்த்திட 99424-88734,81243-72581…

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து