முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் அமைதியாக முடிந்த தேர்தல் 6 ஒன்றியங்களில் 75.15 சதவீத வாக்குப்பதிவு

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் நடைபெற்ற 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. மாலை 5 மணியுடன் முடிவடைந்த வாக்குப்பதிவில் 75.15 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
       ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, நயினார்கோவில், போகலூர், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று முதல்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாலை 5 மணியுடன் முடிவடைந்த வாக்குபதிவில் ஊராட்சி ஒன்றியம் வாரியாக பரமக்குடியில் 77.18 சதவீத வாக்குகளும், போகலூரில் 77.94 சதவீத வாக்குகளும், நயினார்கோவிலில் 76.82 சதவீத வாக்குகளும், முதுகுளத்தூரில் 74.18 சதவீத வாக்குகளும், கமுதியில் 76.73 சதவீத வாக்குகளும், கடலாடியில் 72.32 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. ஆகமொத்தம் 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் மாலை 5 மணியுடன் முடிவடைந்த நிலையில் 75.15 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
     இதுதவிர மாலையில் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திற்கு முன்னதாக வந்த வாக்காளர்களுக்கு 24 வாக்குச்சாவடிகளில் டோக்கன் வழங்கி வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஜனநாயக முறைப்படி அச்சமின்றி பாதுகாப்பாக வாக்களிக்க மாவட்ட நிர்வாகம் எடுத்த பல்வேறு தொடர் நடவடிக்கையின் பயனாக எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான வீரராகவராவ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து