தங்கம் விலை சவரனுக்கு ரூ. 56 குறைந்தது - வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

புதன்கிழமை, 1 ஜனவரி 2020      வர்த்தகம்
gold rate 2019 12 04

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 குறைந்து ரூ. 29,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராமுக்கு ரூ. 7 குறைந்து ரூ. 3,735-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.50.90-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உண்டாகிறது. சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச்சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வந்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் எதிரொலியாலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தது.

இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று தங்கம் விலை கணிசமாகக் குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.29,880-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,735 ஆக இருந்தது.  8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று 29,880 ரூபாயாக இருந்தது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து, 3,922 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 31,376 ரூபாயாகக் குறைந்திருந்தது. வெள்ளியின் விலையும் நேற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 50.90 ரூபாயிலிருந்து 50.30 ரூபாயாகக் குறைந்திருந்தது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை 50,900 ரூபாயிலிருந்து 600 ரூபாய் குறைந்து 50,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து