சி.ஏ.ஏ. போன்ற அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித்ஷா

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      இந்தியா
Amit Sha 2020 01 17

குடியுரிமை சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) ஆதரவாக பீகார் மாநிலம் வைசாலி அருகே பா.ஜ.க. சார்பில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசியதாவது:-

சி.ஏ.ஏ. விவகாரத்தில் சிறுபான்மையினரை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்தி வருகின்றன. வன்முறையை தூண்டி வருகின்றன. எவருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக சி.ஏ.ஏ. கொண்டுவரப்படவில்லை. 370-வது பிரிவு ரத்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, சி.ஏ.ஏ. போன்ற நரேந்திர மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். முதல்வர் நிதிஷ் குமார் தலைமையின் கீழ் பீகாரில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம். எங்கள் கூட்டணி முடிவுக்கு வரும் என்று ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் லல்லு பிரசாத் கனவு காண்கிறார். அவரது கனது பலிக்காது. நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாடும் நிதிஷ் குமார் தலைமையில் இந்த மாநிலமும் வளர்ச்சி பெறும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து