முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரோ லீக் ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் இந்தியா வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

புவனேசுவரம் : புரோ லீக் ஆக்கி போட்டியின், தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

உலகின் தலைசிறந்த 9 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது புரோ லீக் ஆக்கி போட்டி தொடர் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஜூன் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டி பல்வேறு நாடுகளில் அரங்கேறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ‘டாப்-4’ இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். புவனேசுவரத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 3-வது இடத்தில் உள்ள நெதர்லாந்தை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே துடிப்புடன் செயல்பட்ட இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. இந்திய அணியில் ரூபிந்தர் பால் சிங் 2 கோலும் (12-வது, 46-வது நிமிடம்), குர்ஜந்த் சிங் (முதல் நிமிடம்), கேப்டன் மன்தீப்சிங் (34-வது நிமிடம்), லலித் உபாத்யாய் (36-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர். நெதர்லாந்து அணி தரப்பில் ஜிப் ஜான்சென் (14-வது நிமிடம்), ஜெரோன் ஹெர்ட்பெர்ஜெர் (28-வது நிமிடம்) தலா ஒரு கோல் திருப்பினார்கள். இதே மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மீண்டும் மோதின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து