முப்படையினர் பாசறை திரும்பும் நிகழ்ச்சி ஜனாதிபதி, பிரதமர் மோடி பங்கேற்பு

புதன்கிழமை, 29 ஜனவரி 2020      இந்தியா
PM Modi-President 2020 01 29

புது டெல்லி : குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படை வீரர்கள் தங்களது முகாமுக்கு திரும்பும் முன் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29-ம் தேதி நடத்தப்படும் அணிவகுப்பே பாசறை திரும்புதல் ஆகும். இந்நிகழ்வு டெல்லியில் ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடைபெறுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டிற்கான பாசறை திரும்பும் நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்க டெல்லி விஜய் சவுக்கில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். வண்ணமயமான சீருடைகளுடன் இசைக்கருவிகளை வாசித்தபடி முப்படைகளின் இசைக்குழுக்களும் நடத்திய அணிவகுப்பு பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. வழக்கமாக மேற்கத்திய இசை வாசிக்கப்படும் நிலையில் இம்முறை இந்திய இசையும் வாசிக்கப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து