Idhayam Matrimony

தமிழ்நாட்டில் இதுவரை 78 சதவீத எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் : தேர்தல் ஆணையம் தகவல்

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      தமிழகம்
Election 2024-04-08

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் 5 கோடி(78%) எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 78.09 சதவீத எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தற்போது வரை 5 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. லட்சத்தீவில் முழுவதுமாக எஸ்.ஐ.ஆர். படிவங்கள் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் கோவாவில் 99.99 சதவீதம், அந்தமான் நிக்கோபாரில் 89.22 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும், சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளத்தில் 49.55 சதவீதம், புதுச்சேரியில் 93.04 சதவீத படிவங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்களில் 37 கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து