முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி கார் வெடிப்பு: மேலும் ஒரு டாக்டர் கைது

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      இந்தியா
Jail

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் கார் குண்டு வெடிப்பில் மேலும் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டார்.

டெல்லியில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு  கார் வெடித்து சிதறியதில் பலியானோரின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 13 ஆக உயர்ந்தது. 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். போலீசாரின் அதிரடி விசாரணையில், இந்த கார் வெடிப்பு சம்பவம், தற்கொலை தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்துக்கு காரணமானதாக கூறப்படும் டாக்டர் உமரின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போனது. ஏற்கனவே உமரின் தாயார் சமீமா பேகம் மற்றும் 2 சகோதரர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். வெடிவிபத்தில் இறந்த உமரை அடையாளம் காணும் வகையில், சமீமாபேகத்துக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

மேலும் டாக்டர் உமரின் தந்தை குலாம் நபி பாத் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவருக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடக்கிறது. மேலும் உமருடன் பணியாற்றிய 3 டாக்டர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரின் குர்பட்போரா குல்காமை சேர்ந்த டாக்டர் தாஜாமுல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகர் எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். இவருக்கும் வெடி விபத்தில் இறந்த டாக்டர் உமருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே வெடித்த ஹூண்டாய் ஐ20 காரை விற்பனை செய்த டீலர் அரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து