Idhayam Matrimony

அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      தமிழகம்
Boom 2023-11-05

Source: provided

சென்னை : தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பள்ளிகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அது போல, நேற்று தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு ஒரு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வீட்டில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரச் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதனை தொடர்ந்து, மிரட்டல் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்சியில் உள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் இல்லங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஒரே நாளில் தி.மு.க. அமைச்சர்களான சேகர்பாபு, கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகிய 3 பேர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து