தேசிய சீனியர் ஸ்குவாஷ் - தமிழக வீராங்கனை ஜோஸ்னா காலிறுதிக்கு தகுதி

வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2020      விளையாட்டு
josna qualify quarter final 2020 02 13

சென்னை : 77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான தமிழக வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா மத்தியபிரதேச வீராங்கனை ராதிகா ரத்தோரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான தமிழக வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 11-5, 11-3, 11-4 என்ற நேர்செட்டில் மத்தியபிரதேச வீராங்கனை ராதிகா ரத்தோரை எளிதில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் தமிழக வீராங்கனைகள் அபரஜிதா, சுனைனா குருவில்லா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான தமிழக வீரர் சவுரவ் கோஷல் 11-4, 11-3, 11-8 என்ற நேர்செட்டில் சர்வீசஸ் வீரர் சந்தீப் ஜங்ராவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் தமிழக வீரர்கள் அபய்சிங், ஹரிந்தர் பால்சிங் சந்து உள்ளிட்டோரும் வெற்றி கண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து