முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ்: செர்பியாவுக்கு ரூ. 8.30 கோடியை நன்கொடையாக அளித்த டென்னிஸ் வீரர் ஜோகோவிச்

சனிக்கிழமை, 28 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

செர்பியா : கொரோனா வைரஸ் பாதிப்புக்காக செர்பியா நாட்டுக்கு வெண்ட்டிலேட்டர்கள் வாங்கவும் மருத்துவ உபகரணங்களைப் பெறவும் அந்நாட்டு டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் 1.8 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் தொகையை நன்கொடையாக அளித்துள்ளார். அதாவது இந்திய ரூபாய்களின் மதிப்பில் இது சுமார் ரூ.8.30 கோடியாகும்.

செர்பியாவில் கொரோனாவுக்கு இதுவரை 528 பாசிட்டிவ் கரோனா கேஸ்கள் உள்ளன, உலக அளவில் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோவக் ஜோகோவிச் அறக்கட்டளையின் இயக்குநரான அவர் மனைவி ஜெலெனா வென்ட்டிலேட்டர்கள் 18,000 டாலர்கள் முதல் 90,000 டாலர்கள் வரை ஆகும். நோவக் ஜோகோவிச் கூறும்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவ வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றிக்கடன்பட்டுள்ளேன். துரதிர்ஷ்டவசமாக அதிகம் பேர் தினசரி நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே நானும் என் மனைவியும் எங்களிடம் உள்ள ஆதாரங்களை எந்த வழியில் நன்கொடையாக செலுத்தலாம் என்று திட்டமிட்டு வருகிறோம் என்றார். சுவிட்சர்லாந்து நட்சத்திரம் ரோஜர் பெடரர் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காக 1.7 மில்லியன் டாலர்கள் (ரூ.7 கோடி) தொகையை நன்கொடையாக அறிவித்தார். ரபேல் நடால் கொரோனா நிவாரணத்துக்காக ரூ. 91 கோடி திரட்ட சக விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து