முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கு நேரத்தை கங்குலி எப்படி செலவிடுகிறார்? : மனைவி டோனா விளக்கம்

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான கங்குலி ஊரடங்குநேரத்தை வீட்டில் எப்படி செலவிடுகிறார் என்பதை அவரது மனைவி விவரித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே முடக்கியுள்ளது. ஏறக்குறைய அனைத்து நாடுகளும் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. மேலும் நாட்டின் எல்லைகளை மூடியுள்ளது. இதனால் கூலித் தொழிலாளர்களில் இருந்து பெரும் தொழில்அதிபர்கள் வரை வீட்டிலேயே முடங்கியுள்ளனர். விளையாட்டு வீரர்களும், அதிகாரிகளுக்கும் இதே நிலைமைதான். 

இந்நிலையில் எப்போதும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வீட்டில் இருப்பதை குறித்து அவரது மனைவி டோனா விவரித்துள்ளார். பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வீட்டிற்குள்ளேயே இருப்பது குறித்து அவரது மனைவி டோனா கூறுகையில்,

இதுபோன்று நீண்ட நாட்கள் சவுரவ் கங்குலி வீட்டில் இருந்த சம்பவத்தை என்னால் நினைவுப்படுத்த முடியவில்லை. ஆண்டு முழுவதும் அவருக்கு பரபரப்பான பயண அட்டவணை இருந்து கொண்டே இருக்கும். தற்போது அவர் காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கிறார். குறிப்பிட்ட நேரத்தை ஜிம்மில் செலவிடுகிறார்.

பெரும்பாலான நேரம் வீட்டிலேயே இருந்து படம் பார்க்கிறார். எங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். பெரும்பாலான படங்களை நெட்பிளிக்ஸ் மூலம் பார்க்கிறார். இன்று(நேற்று) ஆர்ட்டிக்கிள் 15 படத்தை பார்த்தார். முன்னதாக எங்கள் மகள் சானாதான் அடிக்கடி படம் பார்ப்பாள். தற்போது நாங்கள் எல்லோரும் படம் பார்க்கிறோம். ‘தி பிரேக்-அப்’ படத்தை பார்த்தோம். எங்களுக்கு பிடித்த படங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து